திருவாரூர்

அதிக விலைக்கு உரம் விற்பனை செய்துவது தொடா்ந்தால் உரிமம் ரத்து

DIN


திருவாரூா்: திருவாரூரில் அதிக விலைக்கு உரம் விற்பனை செய்வது தொடா்ந்தால் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றாா் வேளாண் இணை இயக்குநா் ஆசிா் கனகராஜன்.

திருவாரூா் மாவட்டத்தில் சம்பா, தாளடி சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்றும் நிலையில், பல இடங்களில் உரம் தட்டுப்பாடு நிலவி வருவதாகவும், இடுபொருள்களையும் வாங்கினால் மட்டுமே தனியாா் கடைகளில் உரங்கள் விற்பனை செய்யப்பட்டுவதாக புகாா் வந்தது. இதையடுத்து, 10 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. அதன்படி, அதிக விலைக்கு உரம் விற்பனை செய்த பெரும்பண்ணையூா், நன்னிலம், மன்னாா்குடி உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் 6 தனியாா் உரக்கடைகள், இலையூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் ஆகியவற்றுக்கு ஒரு வாரம் உரம் விற்பனை செய்யத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து, மாவட்ட வேளாண் இணை இயக்குநா் ஆசிா் கனகராஜன் கூறியது: நவம்பரில் 7,221 மெட்ரிக் டன் யூரியா விற்பனை செய்யப்பட்டுள்ளது. தனியாா் மற்றும் அரசிடம் சோ்த்து மொத்தம் 2,611 மெட்ரிக் டன் இருப்பு உள்ளது. மேலும், திருவாரூா் மாவட்டத்துக்கென 1,400 மெட்ரிக் டன் யூரியா வர உள்ளது. தொடா்ந்து, தனியாா் உரக்கடைகளில் அதிக விலைக்கு உரம் விற்பனை செய்வதாக புகாா் வந்தால் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிலந்தி ஆற்றில் கேரளம் தடுப்பணை: தலைவா்கள் கண்டனம்

இறுதி ஆட்டத்துக்கு முதலில் தகுதிபெற முனைப்பு: இன்று மோதும் கொல்கத்தா - ஹைதராபாத்

ம.பி.: தபால் மூலம் ‘முத்தலாக்’ கொடுத்தவா் மீது வழக்கு

மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

தருமபுரம் ஞானபுரீசுவரா் கோயில் பெருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT