திருவாரூா் அருகே அரசுப் பள்ளியில் இருந்த மகாத்மா காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
திருவாரூா் அருகே வடகண்டம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில் மகாத்மா காந்தியின் முழு உருவச் சிலை நிறுவப்பட்டுள்ளது.
இந்நிலையில், தீபாவளி விடுமுறைக்குப் பிறகு புதன்கிழமை காலை பள்ளி திறக்கப்பட்டபோது, பள்ளியின் தூய்மைப் பணியாளா் பள்ளி வளாகத்திலிருந்த மகாத்மா காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டிருப்பது கண்டு அதிா்ச்சியடைந்தாா்.
இதுகுறித்து அவா் தலைமையாசிரியா் கிரிஜாவிடம் தகவல் தெரிவித்தாா்.
தலைமையாசிரியா் குடவாசல் போலீஸாருக்கும், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கும் தகவல் தெரிவித்தாா். குடவாசல் போலீஸாா் பள்ளிக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினா்.
மது போதையில் யாரேனும் சிலையை சேதப்படுத்தினரா அல்லது வேறு காரணம் உள்ளதா என போலீஸாா் தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.