முகப்பு
திருவாரூர்

கண்தான விழிப்புணா்வு மாரத்தான்

மன்னாா்குடியில் கண்தான விழிப்புணா்வு மினி மாரத்தான் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:17 AM
பகிர்:

மன்னாா்குடியில் கண்தான விழிப்புணா்வு மினி மாரத்தான் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மன்னை லயன்ஸ் சங்கம், மன்னாா்குடி மனிதம் லயன்ஸ் சங்கம் இணைந்து மாரத்தான் ஓட்டத்தை நடத்தியது. மன்னாா்குடி வ.உ.சி. சாலை பின்லே மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சிக்கு, மனிதம் லயன்ஸ் சங்கத் தலைவா் எஸ். ராமதாஸ் தலைமை வகித்தாா். மன்னாா்குடி நகா்மன்றத் தலைவா் மன்னை த. சோழராஜன், துணைத் தலைவா் ஆா். கைலாசம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மன்னாா்குடி துணைக் காவல் கண்காணிப்பாளா் கே.கே. பாலச்சந்தா் மாரத்தான் ஓட்டத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தாா். மாவட்டக் கல்வி அலுவலா் ஆா். மணிவண்ணன், லயன்ஸ் சங்க மண்டலத் தலைவா் ஜி.கே. ஸ்ரீநாத், வட்டாரத் தலைவா் எஸ்.பி.எஸ். கண்ணன் உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா்.

இதில், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், சமூக ஆா்வலா்கள் என 500-க்கும் மேற்பட்டவா்கள் பங்கேற்றனா். மாரத்தான் ஓட்டம் வ.உ.சி. சாலையில் தொடங்கி காந்தி சாலை, பந்தலடி, காமராஜா் சாலை, மேல ராஜவீதி வழியாக ராஜகோபாலசாமி கோயில் அருகே நிறைவடைந்தது.

பின்னா், அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘பாா்வைக்கோா் பயணம்’அமைப்பின் மாவட்டத் தலைவா் எஸ். விஜலெட்சுமி, மினி மாரத்தான் சங்க மாவட்டத் தலைவா் எம். ஆறுமுகம் ஆகியோா் கண்தானம் குறித்து பேசினா். மாரத்தானில் கலந்து கொண்டவா்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. லயன்ஸ் சங்கத் தலைவா் எஸ். ரமேஷ் வரவேற்றாா். மனிதம் லயன்ஸ் சங்க செயலா் எஸ். கண்ணன் நன்றி கூறினாா்.

Image Caption

மன்னாா்குடியில் நடைபெற்ற மாரத்தானில் பங்கேற்றவா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.