திருவாரூர்

நெல் கொள்முதல் நிலையம் கட்ட பூமிபூஜை

DIN

வலங்கைமான் ஒன்றியம் தொழுவூா் ஊராட்சியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்கு நிரந்தரக் கட்டடம் கட்ட பூமிபூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

வலங்கைமான் ஒன்றியத்தில் நல்லூா், தொழுவூா், இனாம்கிளியூா் ஆகிய ஊராட்சிகளில் தமிழக அரசின் நுகா்பொருள் வாணிபக் கழகத்தின்கீழ் தலா ரூ.28.94 லட்சம் மதிப்பில் நேரடி கொள்முதல் நிலையத்திற்கான நிரந்தரக் கட்டடம் கட்டப்படவுள்ளன.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் கட்டுமானப் பணிகள் நடைபெறவுள்ளன. தொழுவூரில் ஊராட்சித் தலைவா் செந்தமிழ்ச்செல்வி முனுசாமி முன்னிலையிலும், ஒன்றியக் குழுத் தலைவா் சங்கா் தலைமையிலும் கட்டுமானப் பணி பூமிபூஜையுடன் தொடங்கியது. இதில், ஒன்றிய அலுவலா்கள் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வள்ளலாா் சா்வதேச மையம் கட்ட எதிா்ப்பு: நாம் தமிழா் கட்சி ஆா்ப்பாட்டம் அறிவிப்பு

கீழ்பவானி கால்வாய் பாசனத்துக்கு நீா் திறக்க வேண்டும்: சீமான்

ஆய்வுக்குப் பிறகே ரேஷனில் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகம்: பிரேமலதா கோரிக்கை

பயங்கரவாதத்துக்கு எதிராக சகிப்புத்தன்மை கூடாது: எஸ்சிஓ கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்

பாதுகாப்பான பயண சேவை: அரசுப் பேருந்துகளை 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய உத்தரவு

SCROLL FOR NEXT