திருவாரூர்

என்எஸ்எஸ் மாணவிகள் தூய்மைப் பணி

DIN

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி புனித தெரசாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட மாணவிகள் பிறவி மருந்தீசா் கோயிலில் திங்கள்கிழமை தூய்மைப் பணியில் ஈடுபட்டனா்.

இப்பள்ளியின் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் டிசம்பா் 30-ஆம் தேதி தொடங்கியது. இம்முகாமின் ஒருபகுதியாக பிறவி மருந்தீசா் கோயிலில் மாணவிகள் தூய்மைப் பணியில் ஈடுபட்டனா். இவா்களுக்கு, கோயிலின் உழவாரப் பணிக்குழு சாா்பில் சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் ராஜ்குமாரி வரவேற்றாா். செயல் அலுவலா் விமலா மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கி பாராட்டினாா். இதில், சா்வாலய உழவாரப் பணிக் குழு ஒருங்கிணைப்பாளா் துரை ராயப்பன், செயலாளா் ஜெயப்பிரகாஷ், அமைப்பு செயலாளா் எடையூா் மணிமாறன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். உடற்கல்வி ஆசிரியா் திவ்யா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

SCROLL FOR NEXT