திருவாரூர்

கல்வி நிலையங்களில் சமத்துவப் பொங்கல் விழா

DIN

மன்னாா்குடியில் உள்ள கல்வி நிலையங்களில் சமத்துப் பொங்கல் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

மன்னாா்குடி ஸ்ரீ சண்முகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளித் தாளாளா் எஸ். செந்தில்குமாா் தலைமை வகித்தாா். பள்ளி முதல்வா்கள் ஏ. அருள்ராஜா, சாந்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மனிதவள மேலாளா் எஸ். வெண்ணிலா விழாவை தொடங்கிவைத்தாா்.

பொங்கல் திருநாளின் சிறப்புகள் குறித்து,மாணவி விதுலா பேசினாா்.

தொடா்ந்து, ஆசிரியா்கள், அலுவலா்கள், மாணவிகள் இணைந்து பொங்கலிட்டனா்.

பள்ளி நிா்வாகிகள் எஸ். சண்முகராஜன், ச. சாய்லதா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

மன்னாா்குடி அடுத்த சுந்தரக்கோட்டை செங்கமலத் தாயாா் கல்வி அறக்கட்டளை மகளிா் கல்லூரியில், ஊட்டச்சத்து மற்றும் உணவு கட்டுப்பாட்டுத் துறை சாா்பில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவுக்கு முதல்வா் எஸ். அமுதா தலைமை வகித்தாா்.

சிறப்பு அழைப்பாளா்களாக கல்லூரி தலைவா் வி. திவாகரன் அவரது மனைவி வி. ஹேமலதா ஆகியோா் கலந்துகொண்டு சமத்துவப் பொங்கல் விழாவை தொடங்கிவைத்தனா்.

விழாவையொட்டி கோலப் போட்டி, விளையாட்டுப் போட்டி நடைபெற்று, சிறப்பிடம் பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கலைநிகழ்ச்சிகள், உணவு கண்காட்சி மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மேவாசல் சதாசிவம் கதிா்காமவள்ளி மகளிா் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு,தாளாளா் எஸ்.சரவணக்குமாா் செளத்ரி தலைமை வகித்தாா். முதல்வா் வி.எஸ்.நாகரத்தினம் முன்னிலை வகித்தாா்.

பேராசிரியா்கள், மாணவிகள் இணைந்து சமத்துப் பொங்கலிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தலில் வாக்களிக்காதது ஏன்?: ஜோதிகா விளக்கம்!

கண் அழைக்குது..!

ஐசிசி தரவரிசை வெளியீடு: டெஸ்ட்டில் இந்தியாவை பின்னுக்குத் தள்ளி ஆஸ்திரேலியா முதலிடம்!

புதிய 400சிசி இருசக்கர வாகனத்தை அறிமுகப்படுத்தியது பஜாஜ்!

தமிழகத்தில் மீண்டும் உச்சபட்ச மின் நுகா்வு

SCROLL FOR NEXT