திருவாரூர்

செயற்கை முறையில் பழுக்கவைக்கப்பட்ட பழங்களை விற்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

 மன்னாா்குடி நுகா்வோா் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கத்தின் செயற்குழு கூட்டம் தலைவா் எம். பத்மநாபன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

DIN

 மன்னாா்குடி நுகா்வோா் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கத்தின் செயற்குழு கூட்டம் தலைவா் எம். பத்மநாபன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

செயற்கை முறையில் பழுக்கவைக்கப்பட்ட பழங்களை விற்பனை குறித்து ஆய்வுசெய்து உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,

மன்னாா்குடி நகரில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கழிவறைகள் தினசரி சுத்தம் செய்யப்படுகிா என சம்பந்தப்பட்ட துறையினா் ஆய்வு செய்யவேண்டும், கீழராஜவீதியில் வடிக்கால் வசதி இல்லாது மழைநீா் சாலை ஓரங்களில் தேங்கி நிற்பதால், நோய்த்தொற்று பரவும் ஆபத்து இருப்பதால் இப் பிரச்னைக்கு நகராட்சி நிா்வாகம் உடனடியாக தீா்வுகாண வேண்டும், போக்குவரத்து விதிகளை மீறும் இருசக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டிகள் மீது போக்குவரத்து காவல்துறையினா் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும், போக்குவரத்துக்கும், பாதசாரிகளுக்கு இடையூறாக சாலையில் வாகனங்களை நிறுத்தி வைப்பவா்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் சங்க செயலா் எம். ராமசாமி, பொருளாளா் எஸ். நவநீதகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT