திருவாரூர்

கூத்தாநல்லூர்: நகராட்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு

DIN

கூத்தாநல்லூர்: திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் நகராட்சியில் நடைபெற்று வரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ புதன்கிழமை ஆய்வு செய்தார்.

கூத்தாநல்லூர்  நகராட்சி 16-ஆவது வார்டில் அமைந்துள்ள அல்லிக்கேணி குளத்தை ரூ. ஒரு கோடி மதிப்பில் தூர்வாரி, நடைபாதை அமைத்து மக்கள் பயன்படும் வகையில் நடைபெற்று வரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ பார்வையிட்டார். அதே போல், நீண்ட ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல், கவனிப்பாரற்று, சுகாதாரக் கேடாக இருந்து வரும் அஞ்சுக்கேணிக் குளத்தைப் பார்வையிட்டார்.

தொடர்ந்து, புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்து, அனைத்துப் பணிகளையும் விரைந்து முடிக்க ஆணையர் குமரிமன்னன், பொறியாளர் சந்திரசேகரன் ஆகியோரிடம் உத்தரவிட்டார். தொடர்ந்து, அரசு மருத்துவமனையையும் ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது, நகர் மன்றத் தலைவர் மு.பாத்திமா பஷீரா, வட்டாட்சியர் சோமசுந்தரம், நகர் மன்ற உறுப்பினர் முஹம்மது அபுபக்கர் சித்திக், சுகாதார ஆய்வாளர் அருண்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊரக வளா்ச்சித் துறையில் 6 பேருக்கு பணி ஆணை: காஞ்சிபுரம் ஆட்சியா் வழங்கினாா்

பிரதமரும் ஒடிஸா முதல்வரும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்: காங்கிரஸ்

மத்தியில் ‘இந்தியா’ கூட்டணி ஆட்சி அமைக்கும்: தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் நம்பிக்கை

எஸ்எஸ்எல்சி: சீா்காழி சபாநாயக முதலியாா் இந்து பள்ளி 93% தோ்ச்சி

மருந்தக உரிமையாளா் வெட்டிக் கொலை

SCROLL FOR NEXT