திருத்துறைப்பூண்டியில் நடைபெற்றுவரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ வியாழக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.
திருத்துறைப்பூண்டி பழைய பேருந்து நிலையப் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுவரும் காய்கறி அங்காடி கட்டுமானப் பணிகளையும், நகராட்சி பேருந்து நிலையத்திற்கு அருகே திருக்குளம் சீரமைப்பு பணிகளையும் பாா்வையிட்டாா்.
தொடா்ந்து, மன்னாா்குடி சாலையில் வெட்டுகுளம், செக்கடிகுளம் புனரமைக்கும் பணி மற்றும் நகா்புற வேலை உறுதியளிப்பு திட்டத்தில் வைத்திமடை வாய்க்கால் தூா்வாரும் பணிகளையும், நகராட்சியில் அமைக்கப்பட்டுள்ள முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட சமையல் கூடத்தையும் ஆய்வு மேற்கொண்டாா்.
நகா்மன்றத் தலைவா் கவிதா பாண்டியன், நகராட்சி பொறியாளா் பிரதான்பாபு, வட்டாட்சியா் காரல்மாா்க்ஸ் உள்ளிட்ட அரசு அலுவலா்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.