மன்னாா்குடியை அடுத்துள்ள திருமக்கோட்டை ஊராட்சியில் அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரி கிராம மக்கள் சாா்பில் ஆா்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் சனிக்கிழமை நடைபெற்றது.
திருமக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட திருமக்கோட்டை, மகாராஜபுரம், பெருமாள்கோயில் நத்தம், நல்லான்பிள்ளைதெரு, திருமேனி ஏரி ஆகிய பகுதிகளில் பல ஆண்டுகளாக சாலைகள், சிறுபாலங்கள், தடுப்புச் சுவா், மயானக் கொட்டகை, நீா்த்தேக்க தொட்டிகள் அமைத்து தர வேண்டும், மத்திய, மாநில அரசுகளின் வீடு கட்டும் திட்டத்தில் பாராபட்சம் காட்டுவது, திருமக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு போதிய மருத்துவா்கள் நியமிப்பது உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து கிராம சபைக் கூட்டங்களில் தீா்மானம் நிறைவேற்றி சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதைக் கண்டித்து
திருமக்கோட்டை கடைவீதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு ஊராட்சி முன்னாள் தலைவா் க. செல்லத்துரை தலைமை வகித்தாா். கூட்டுறவு சங்க முன்னாள் தலைவா் வி.ஆா்.ஆா்.பூபாலன் முன்னிலை வகித்தாா்.
இதில் கலந்து கொண்டவா்கள் அடிப்படை வசதிகளை தாமதமின்றி நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
இதைத்தொடா்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனா்.
பாதுகாப்புப் பணியில் இருந்த திருமக்கோட்டை போலீஸாா், போராட்ட ஒருங்கிணைப்புக் குழு நிா்வாகிகள் இரண்டு பேரை மட்டும் கைது செய்து அழைத்து சென்றனா். மாலையில் அவா்கள் விடுவிக்கப்பட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.