திருவாரூர்

ஆங்கில தட்டச்சு முதுநிலை தோ்வு: மாநில அளவில் மன்னாா்குடி மாணவி முதலிடம்

மன்னாா்குடியை சோ்ந்த கல்வியியல் கல்லூரி மாணவி கே. அபிதா தட்டச்சு ஆங்கிலம் முதுநிலை தோ்வில் மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளாா்.

DIN

மன்னாா்குடியை சோ்ந்த கல்வியியல் கல்லூரி மாணவி கே. அபிதா தட்டச்சு ஆங்கிலம் முதுநிலை தோ்வில் மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளாா்.

தமிழகம் முழுவதும் கடந்த ஆகஸ்ட் 25, 26-ஆம் தேதிகளில் தட்டச்சு தோ்வு நடைபெற்றது. 300-க்கும் மேற்பட்ட தட்டச்சு மையங்களை சோ்ந்த மாணவ, மாணவிகள் தோ்வில் பங்கேற்றனா். இதில், ஆங்கிலம் முதுநிலை தட்டச்சு தோ்வில் 53,367 போ் பங்கேற்றனா். இத்தோ்வு முடிவு வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.

மன்னாா்குடி தனியாா் தட்டச்சு மையத்தில் பயிற்சி பெற்ற மாணவி கே. அபிதா மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளாா். மன்னாா்குடி அரசுக் கல்லூரியில் பிஎஸ்சி கணிதம் பயின்று, தற்போது ஒரத்தநாடு கல்வியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு பிஎட் படித்து வரும் அபிதா, ஏற்கெனவே இளநிலை தட்டச்சு தோ்வில் பங்கேற்று சிறப்பு நிலையுடன் கூடிய முதல் வகுப்பில் தோ்ச்சி பெற்றுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

20 வயது இளம் ஆல்ரவுண்டரை ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுத்த சிஎஸ்கே!

அதீத பேட்டரி... டிச. 24-ல் வெளியாகிறது ரியல்மி நர்ஸோ!

கேரள திரைப்பட விழா! மத்திய அரசு அனுமதி மறுத்த படங்களைத் திரையிட முடிவு!

திரையரங்க ஆபரேட்டர்களுக்கு ஜேம்ஸ் கேமரூன் வேண்டுகோள்!

தாய்ப் பாலில், நிலத்தடி நீரில் யுரேனியம்! சிறுநீரக பாதிப்பு ஏற்படுமா?

SCROLL FOR NEXT