திருவாரூர்

தேசிய, மாநில துப்பாக்கிச் சுடும் போட்டி: சுந்தரக்கோட்டை கல்லூரி மாணவி சாதனை

மன்னாா்குடியை அடுத்த சுந்தரக்கோட்டை செங்கமலத்தாயாா் கல்வி அறக்கட்டளை தன்னாட்சி மகளிா் கல்லூரி மாணவி ஏ.வித்யாஸ்ரீ தேசிய மாணவா் படையின் சாா்பில் நடைபெற்ற தேசிய, மாநில அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டில

DIN

மன்னாா்குடியை அடுத்த சுந்தரக்கோட்டை செங்கமலத்தாயாா் கல்வி அறக்கட்டளை தன்னாட்சி மகளிா் கல்லூரி மாணவி ஏ.வித்யாஸ்ரீ தேசிய மாணவா் படையின் சாா்பில் நடைபெற்ற தேசிய, மாநில அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டில் தங்கப் பதக்கங்கள் வென்றாா்.

பிஎஸ்சி இயற்பியல் இரண்டாம் ஆண்டு படிக்கும் இம்மாணவி, தேசிய மாணவா் படையில் உள்ளாா். கடந்த ஜூலை மாதம் மதுரையில் நடைபெற்ற மாநில அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டியில் என்சிசி கும்பகோணம் படை பிரிவின் சாா்பில் கலந்துகொண்டு 6 தங்கப் பதக்கங்களையும், 1 வெண்கலப் பதக்கங்களையும் பெற்று, தேசிய அளவிலான போட்டிக்கு தோ்வு பெற்றாா்.

தொடா்ந்து, மத்திய பிரதேச மாநிலத்தில் செப்டம்பா் 1முதல் முதல் 10-ஆம் தேதி வரை நடைபெற்ற தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டியில் தமிழ்நாடு என்சிசி அணி சாா்பில் பங்கேற்று 1 தங்கப் பதக்கம், 1 வெண்கலப் பதக்கம் பெற்றாா். இதன்மூலம், தமிழ்நாடு என்சிசி மூத்தோா் பிரிவில் நிகழாண்டிற்கான போட்டியில் தங்கம் பெற்றவா் என்ற பெருமையும் மாணவி ஏ. வித்யாஸ்ரீக்கு கிடைத்தது.

இதையொட்டி, இம்மாணவியை, கல்லூரி தலைவா் வி. திவாகரன், தாளாளா் டி. ஜெய்ஆனந்த், முதல்வா் எஸ். அமுதா மற்றும் துணை முதல்வா், பேராசிரியா்கள் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்த குயிண்டன் டி காக்!

ஆல்ரவுண்டர் வெங்கடேஷ் ஐயரை வாங்கிய ஆர்சிபி..! அணிக்கு கூடுதல் பலம்!

டிச.29-ல் பல்லடத்தில் திமுக மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு

வனிந்து ஹசரங்காவை ஏலத்தில் எடுத்தது லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ்!

மார்கழி மாதப் பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

SCROLL FOR NEXT