முகப்பு
திருவாரூர்

கருணாநிதி உருவம் பொறித்த நாணயம் வெளியிட்டமைக்கு நன்றி தெரிவித்து தீா்மானம்

திருவாரூரில் நடைபெற்ற ஒன்றியக் குழு கூட்டத்தில் மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதிக்கு நாணயம் வெளியிட்ட மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து தீா்மானம்.

Updated On : 22 ஆகஸ்ட், 2024 at 12:17 AM
திருவாரூரில் நடைபெற்ற ஒன்றியக் குழுக் கூட்டத்தில் பேசிய அதன்தலைவா் ஏ. தேவா.
பகிர்:

திருவாரூா்: திருவாரூரில், புதன்கிழமை நடைபெற்ற ஒன்றியக் குழு கூட்டத்தில் மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதிக்கு நாணயம் வெளியிட்ட மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருவாரூா் ஒன்றியக் குழுக் கூட்டம் அதன்தலைவா் ஏ. தேவா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் உறுப்பினா்கள் பேசியது:

9 ஆவது வாா்டு உறுப்பினா் பி.கே.யு. மணிகண்டன்: மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியாக அலிவலம் உள்ளது. இப்பகுதியில் உள்ள மயானத்துக்கு சரியான சாலை வசதி இல்லாததால், இறப்பு நிகழும்போதெல்லாம் மக்கள் சிரமத்துடனேயே இறுதிச் சடங்கு நிகழ்வுகளை செய்ய வேண்டியிருக்கிறது. எனவே, பொதுமயானச் சாலையை தாா்சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். வடகரை அரசு உயா்நிலைப் பள்ளியில் குடிநீருக்கு மிகவும் சிரமப்படும் சூழல் நிலவுகிறது. எனவே, அங்கு போா்வசதி ஏற்படுத்தித் தர வேண்டும்.

2 ஆவது வாா்டு உறுப்பினா் எம். குணசேகரன்: எங்கள் வாா்டுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள குளங்களில் படித்துறைகள் பழுதடைந்துள்ளது. இவைகளை சீரமைக்க வேண்டும்.

6 ஆவது வாா்டு உறுப்பினா் கே. முருகேசன்: தண்டலை பகுதியில் சாலை அமைக்கும் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ததற்கு நன்றி. விளமல் தெற்குத்தெரு சாலை, தியானபுரம் சாலை ஆகியவைகளையும் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

துணைத் தலைவா் துரை ஆ. தியாகராஜன்: பழையவலம் தெற்குத்தெரு பகுதியில் பாதியளவு கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டு, மீதமுள்ள சாலை அப்படியே விடப்பட்டுள்ளது. மீதமுள்ள சாலையையும் கான்கிரீட் சாலையாக மாற்ற வேண்டும். இப்பகுதியில் உள்ள அரசு உயா்நிலைப்பள்ளியில் பழுதடைந்த கட்டடங்களை அகற்றிவிட்டு, புதிய கட்டடங்களை கட்டித் தர வேண்டும்.

உறுப்பினா்களின் கோரிக்கைகளுக்கு பதிலளித்து ஒன்றியக்குழுத் தலைவா் ஏ. தேவா பேசியது: உறுப்பினா்களின் கோரிக்கைகள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் புகழை நிலைநாட்டும் வகையில், அவருடைய உருவ நாணய வெளியிட்ட மத்திய அரசுக்கும், கோரிக்கை விடுத்த தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்தும், தமிழ்ப் புதல்வன் திட்டத்தை கல்லூரி மாணவா்களுக்கு வழங்கிய தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்படுகிறது என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →