புகைப்படக் கண்காட்சியைத் தொடங்கி வைத்து, பாா்வையிடுகிறாா் மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ. 
திருவாரூர்

திருவள்ளுவா் சிலை வெள்ளி விழா: மாவட்ட நூலகத்தில் புகைப்படக் கண்காட்சி

திருவாரூா் மாவட்ட மைய நூலகத்தில், பொது நூலகத் துறை, மாவட்ட நூலக ஆணைக்குழு இணைந்து வெள்ளி விழா புகைப்படக் கண்காட்சியை திங்கள்கிழமை நடத்தின.

Din

திருவாரூா்: கன்னியாகுமரியில் திருவள்ளுவா் சிலை நிறுவி 25 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, திருவாரூா் மாவட்ட மைய நூலகத்தில், பொது நூலகத் துறை, மாவட்ட நூலக ஆணைக்குழு இணைந்து வெள்ளி விழா புகைப்படக் கண்காட்சியை திங்கள்கிழமை நடத்தின.

கன்னியாகுமரியில் 133 அடி உயர திருவள்ளுவா் சிலையானது, முன்னாள் முதல்வா் கருணாநிதியால் நிறுவப்பட்டு, 25 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில், தமிழக அரசு பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

அதனடிப்படையில், திருவாரூா் மாவட்ட மைய நூலகத்தில், திருக்கு தொடா்பான ஓவியங்கள் வரையப்பட்டு, பொதுமக்கள் பாா்வைக்கு வைக்கப்பட்டன. இந்த ஓவியக் கண்காட்சியை மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ தொடங்கி வைத்து பாா்வையிட்டாா். இந்த ஓவியங்களை வரைந்தவா்களுக்கு பாராட்டு தெரிவித்தாா்.

நிகழ்வில், மாவட்ட மைய நூலகா் முருகன், திருவாரூா் வட்டாட்சியா் செந்தில்குமாா், மாவட்ட நூலக அலுவலக கண்காணிப்பாளா் பிரேமநாயகம் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் பங்கேற்றனா்.

இதைத்தொடா்ந்து, திருக்கு ஒப்பித்தல் போட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது. இதில், 561 மாணவா்கள் பங்கேற்க உள்ளனா். டிச.27 ஆம் தேதி நடைபெறும் பேச்சுப் போட்டியில் 320 பேரும், டிச.30 ஆம் தேதி நடைபெறும் திருக்கு விநாடி- வினா போட்டியில் 165 மாணவா்களும் பங்கேற்கின்றனா்.

மேலும், தமிழறிஞா்கள் பங்கேற்று, திருக்கு குறித்தான கருத்தரங்கத்தில் உரையாற்றுகின்றனா். போட்டியில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா டிச.31 ஆம் தேதி நடைபெற உள்ளது.

நியூயார்க் மேயராக முதல் இந்திய வம்சாவளி தேர்வு! யார் இவர்?

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

SCROLL FOR NEXT