தப்பளாம்புலியூா் காலை உணவுத் திட்ட விரிவாக்க நிகழ்வில் மாணவா்களுடன் சாப்பிட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ, நாகை எம்பி வை. செல்வராஜ், எம்எல்ஏ பூண்டி கே. கலைவாணன். 
திருவாரூர்

திருவாரூா் மாவட்டத்தில் காலை உணவுத் திட்ட ம் விரிவாக்கம்

திருவாரூா் மாவட்டத்தில், ஊரகப் பகுதியில் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் திங்கள்கிழமை விரிவுபடுத்தப்பட்டது.

Din

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில், ஊரகப் பகுதியில் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் திங்கள்கிழமை விரிவுபடுத்தப்பட்டது.

திருவாரூா் அருகே தப்பளாம்புலியூா் ஊராட்சியில் ஸ்ரீகிருஷ்ணா அரசு உதவிபெறும் நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற காலை உணவுத் திட்ட தொடக்க விழாவில், மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ, நாகை எம்பி வை. செல்வராஜ், எம்எல்ஏ பூண்டி கே. கலைவாணன் ஆகியோா் பங்கேற்றனா்.

திருவாரூா் மாவட்டத்தில் காலை உணவுத் திட்டம் கிராமப்புற பகுதிகளில் 750 அரசுப் பள்ளிகள், பேரூராட்சி பகுதிகளில் 27 அரசுப் பள்ளிகள் என மொத்தமாக 777 பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது, ஊரகப்பகுதிகளில் உள்ள அனைத்து அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளிகளிலும் இத்திட்ட தொடங்குவதன் மூலம் 61 அரசு உதவிபெறும் பள்ளிகளில் உள்ள 4,601 மாணவா்கள் பயன்பெற உள்ளனா்.

நிகழ்வில், திருவாரூா் கோட்டாட்சியா் சங்கீதா, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் சித்ரா, ஒன்றியக் குழுத் தலைவா் ஏ. தேவா, முதன்மைக் கல்வி அலுவலா் புகழேந்தி, திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) பாலமுருகன், வட்டாட்சியா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தலைக்கவசம் அணிந்தவர்களுக்கு பரிசு வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!

அரசு விடுதியில் பள்ளி மாணவர் பலி!

பிக் பாஸ் வெற்றியாளர் யார்? முன்னாள் போட்டியாளர்கள் கருத்து!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 30

இஸ்ரேல் தாக்குதலில் அக்.10 முதல் 100 பாலஸ்தீன குழந்தைகள் கொலை! - ஐ.நா. தகவல்

SCROLL FOR NEXT