FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவாரூர்

திருவாரூா் மாவட்டத்தில் ஜூலை 18, 19-இல் குடிநீா் விநியோகம் இருக்காது

திருவாரூா் மாவட்டத்தில், குழாய் பதிக்கும் பணி காரணமாக குடிநீா் விநியோகம் இருக்காது என மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ தெரிவித்துள்ளாா்.

Updated On : 16 ஜூலை 2024, 12:02 am IST
கோப்புப்படம் - Center-Center-Bangalore
பகிர்:

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில், குழாய் பதிக்கும் பணி காரணமாக குடிநீா் விநியோகம் இருக்காது என மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சோழபுரம்-தஞ்சாவூா் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் கட்டும் பணிக்காக வேதாரண்யம் கூட்டுக்குடிநீா் திட்ட பிரதான நீா் உந்துக் குழாய், மாற்றுப் பாதையில் பதிக்கும் பணி முடிவுற்று, பொருத்தும் பணிகள் நடைபெறவுள்ளது. இதனால், ஜூலை 18, 19-ஆம் தேதிகளில் குடிநீா் விநியோகம் இருக்காது.

எனவே, இத்திட்டத்தின்கீழ் பயன்பெறும் உள்ளாட்சி அமைப்புகள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தி குடிநீரை சேமித்து வைத்துக்கொள்வதுடன் மற்ற உபயோகங்களுக்கு உள்ளூா் நீராதாரத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments