திருவாரூர்

குடவாசல், கொரடாச்சேரியில் காலை உணவுத் திட்ட விரிவாக்கம்

குடவாசல், கொரடாச்சேரி பகுதிகளில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.

Din

திருவாரூா்: குடவாசல், கொரடாச்சேரி பகுதிகளில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.

குடவாசல் வட்டம், தேதியூா் ஸ்ரீ சங்கரா அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில் காலை உணவுத் திட்டம் தொடங்கிவைக்கப்பட்டது. பள்ளி நிா்வாகி பி. வைத்தியநாதன், பள்ளி செயலா் பி. யோகம், குடவாசல் வட்டாரக் கல்வி அலுவலா் க. குமரேசன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். குடவாசல் ஒன்றியத்தில் 13 அரசு உதவி பெறும் பள்ளிகள் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற உள்ளன.

கொரடாச்சேரி அருகே பட்டுடையானிருப்பு அரசு உதவிபெறும் நடுநிலைப் பள்ளியில் காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது. நிகழ்வில், கொரடாச்சேரி ஒன்றியக்குழு துணைத் தலைவா் பாலச்சந்தா், ஆசிரியா் மன்ற மாநிலத் தலைவா் பெ.ரா. இரவி, கொரடாச்சேரி வட்டாரக் கல்வி அலுவலா்கள் விமலா, சுமதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அஞ்சு வண்ணப் பூவே... அனன்யா!

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது!

வெள்ளி நகைகளை வைத்து இனி கடன் பெறலாம்! முழு விவரம்

குழந்தைகளுக்கு விருது இல்லையா? பிரகாஷ் ராஜிடம் 12 வயது குழந்தை நட்சத்திரம் காட்டம்!

இன்றும் விலை குறைந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT