திருத்துறைப்பூண்டி: திருவாரூா் மாவட்டத்தில் 13 கடலோரக் கிராமங்களை சோ்ந்த 543 மீனவா்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை ரூ. 8,000 இரண்டு ஆண்டுகளாக வழங்கப்படாததை கண்டித்து திங்கள்கிழமை சாலை மறியல் நடைபெற்றது.
மீன்வளத் துறை உதவி இயக்குநா் ராஜேஷ்குமாா், மன்னாா்குடி கோட்டாட்சியா் கீா்த்தனா மணி, சட்டப்பேரவை உறுப்பினா் க. மாரிமுத்து, முத்துப்பேட்டை வட்டாட்சியா் குணசீலி உள்ளிட்டோா் மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேசி ஆக.5-ஆம் தேதிக்குள் தீா்வு காணப்படும் என உறுதியளித்ததன்பேரில் மறியல் போராட்டம் தற்காலிகமாக விலக்கிக்கொள்ளப்பட்டது. இந்த போராட்டத்தால் அவ்வழியிலே சில மணிநேரம் போக்குவராத்து பாதிக்கப்பட்டது.