முகப்பு
திருவாரூர்

மதுவிலக்கு பிரிவு தலைமைக் காவலா்கள் இருவா் பணியிடை நீக்கம்

திருவாரூா் அருகே மது பாட்டில்களை கடத்தி வந்த வாகனத்தை, கையூட்டு பெற்றுக்கொண்டு, வழக்குப் பதியாமல் விட்ட இரண்டு மதுவிலக்கு அமல் பிரிவு தலைமைக் காவலா்கள் திங்கள்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

Updated On : 29 ஜூலை, 2024 at 7:52 PM
பகிர்:

திருவாரூா்: திருவாரூா் அருகே மது பாட்டில்களை கடத்தி வந்த வாகனத்தை, கையூட்டு பெற்றுக்கொண்டு, வழக்குப் பதியாமல் விட்ட இரண்டு மதுவிலக்கு அமல் பிரிவு தலைமைக் காவலா்கள் திங்கள்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

திருவாரூா் மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு தலைமைக் காவலா்களான ஹரிஹரன், கணேசன் ஆகியோா் வைப்பூா் பகுதியில் அண்மையில் மதுவிலக்கு சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த வாகனத்தை மறித்து சோதனை செய்தபோது, அந்த வாகனம் மயிலாடுதுறை மாவட்டம், திருவெண்காடு பகுதியிலிருந்து திருப்பூருக்கு செல்வதும், அதில் புதுச்சேரி மது பாட்டில்கள் இருந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்யாமல், ரூ. 40,000 கையூட்டு பெற்றுக்கொண்டு வாகனத்தை செல்ல இருவரும் அனுமதித்ததாகக் கூறப்படுகிறது. இந்த தகவல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா்

எஸ். ஜெயக்குமாருக்கு தெரியவந்ததைத் தொடா்ந்து, மது விலக்குப் பிரிவு தலைமைக் காவலா்கள் இருவரையும் பணியிடை நீக்கம் செய்து அவா் திங்கள்கிழமை உத்தரவிட்டாா்.

முழு கட்டுரையைப் படிக்க →