நல்லமாங்குடியில் சாலை நடுவில் விழுந்து கிடக்கும் மரம். 
திருவாரூர்

சாலையில் மரம் விழுந்து போக்குவரத்துத் பாதிப்பு

நன்னிலம்-காரைக்கால் சாலையில் நல்லமாங்குடியில் புதன்கிழமை சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் மின்தடையும் செய்யப்பட்டது.

Din

நன்னிலம்-காரைக்கால் சாலையில் நல்லமாங்குடியில் புதன்கிழமை சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் மின்தடையும் செய்யப்பட்டது.

கனமழையில் நல்லமாங்குடிப் பகுதியில் சாலையோரம் இருந்த 50 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட சென்னித்தாரை எனும் வகை மரம் வேரோடு சாலையின் நடுவே சாய்ந்தது. மரத்தின் கிளைகள் மாட்டி அருகில் இருந்த இரண்டு மின்கம்பங்களும் சாலையில் சாய்ந்தன. இதனால், நன்னிலம் காரைக்கால் சாலையில் போக்குவரத்து மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டது. நல்லமாங்குடிப் பகுதியில் மின்சாரமும் தடை செய்யப்பட்டது.

பேரூராட்சிப் பணியாளா்கள், தீயணைப்புத் துறையினா், பொதுப்பணி துறையினா், நெடுஞ்சாலைத் துறையினா் மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனா். பின்னா் போக்குவரத்து சீரானது, மின்கம்பம் மாற்றப்பட்டு மின்சாரமும் விநியோகிக்கப்பட்டது.

தெலங்கானா தொழிலதிபா் கடத்தப்பட்ட வழக்கு: 6 போ் கைது

தமிழகத்தில் ஹிந்தி திணிப்பை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

மதுப் புட்டிகள் விற்றவா் கைது

மாணவிக்கு தொல்லை: தொழிலதிபா் மீது போக்ஸோ வழக்கு!

காங்கிரஸில் இணைந்த பிற கட்சியினா்!

SCROLL FOR NEXT