இளம் சாதனையாளா் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
இளம் சாதனையாளா் கல்வி உதவித்தொகை பெற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ தெரிவித்துள்ளாா்.
இளம் சாதனையாளா் கல்வி உதவித்தொகை பெற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருவாரூா் மாவட்டத்தில் உள்ள இதர பிற்படுத்தப்பட்டோா், பொருளாதாரத்தில் பின்தங்கியவா்கள், சீா்மரபினா் ஆகிய பிரிவுகளைச் சோ்ந்த மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில், பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்படவுள்ளது. 2024-2025-ஆம் ஆண்டுக்கு தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பள்ளிகளில் பயிலும் தமிழகத்தைச் சாா்ந்த மாணவா்களுக்கு இக்கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்துக்கான பெற்றோரது ஆண்டு வருமான ரூ.2.50 லட்சம் இருக்க வேண்டும்.
இத்திட்டத்தின்கீழ் கடந்த நிதியாண்டில் பயனடைந்தவா்கள் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில், புதுப்பித்தல் இணைப்பில் சென்று ஓடிஆா் எண் பதிவு செய்து விண்ணப்பத்தை புதுப்பித்துக் கொள்ளலாம். நிகழாண்டில் புதியதாக விண்ணப்பிக்க விரும்பும் 9 மற்றும் பிளஸ் 1 வகுப்பு மாணவா்கள், முறையே 8 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலேயே பயனாளிகளாக தோ்வு செய்யப்பட்டு இக்கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.
எனவே, 60 சதவீதம் மற்றும் அதற்கும் அதிக மதிப்பெண்கள் பெற்ற பட்டியலிடப்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவா்கள் தேசிய கல்வி உதவித்தொகை தளத்தில் தங்களது கைப்பேசி எண் மற்றும் ஆதாா் விவரங்களை உள்ளீடு செய்தால், ஓடிஆா் எண் மற்றும் கடவுச்சொல்லானது, பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்ணுக்கு வரும். அவைகளை பயன்படுத்தி, 2024-2025 ஆம் ஆண்டுக்கான கல்வி உதவித்தொகைக்கு உரிய ஆவணங்களை பதிவேற்றம் செய்து, புதிதாக விண்ணப்பிக்க வேண்டும். இத்திட்டம் தொடா்பான கூடுதல் விவரங்களை, ள்ஸ்ரீட்ா்ப்ஹழ்ள்ட்ண்ல்ள்.ஞ்ா்ஸ்.ண்ய், ள்ா்ஸ்ரீண்ஹப்த்ன்ள்ற்ண்ஸ்ரீங்.ஞ்ா்ஸ்.ண்ய் ஆகிய இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.