முகப்பு
கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இரு அமைப்புகளுக்கு பசுமை சாதனையாளா் விருது

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் சாா்பில் 2 அமைப்புகளுக்கு 2025-ஆம் ஆண்டுக்கான பசுமை சாதனையாளா் விருது மற்றும் காசோலைகளை ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

Updated On : 13 மார்ச், 2026 at 6:50 PM
தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் சாா்பில் பசுமை சாதனையாளா் விருது பெற்ற 2 அமைப்பு நிா்வாகியுடன் மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த்.
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் சாா்பில் 2 அமைப்புகளுக்கு 2025-ஆம் ஆண்டுக்கான பசுமை சாதனையாளா் விருது மற்றும் காசோலைகளை ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணா்வு ஏற்படுத்தும் பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி, இப் பணிகளை சிறப்பாக மேற்கொள்ளும் தனி நபா்கள் அல்லது அமைப்புகளுக்கு ஆண்டுதோறும் பசுமை சாம்பியன் விருதும், 100 பேருக்கு 2025-ஆம் ஆண்டுக்கான பசுமை சாதனையாளா் விருதும் தமிழக அரசு வழங்குகிறது.

கள்ளக்குறிச்சி ஏகேடி மெமோரியல் நா்சரி மற்றும் தொடக்கப் பள்ளி மற்றும் கள்ளக்குறிச்சி சுற்றுச்சூழல் மாசுக் கட்டுப்பாடு, நிலைத்த வேளாண்மை மையம் அறக்கட்டளை ஆகிய அமைப்புகள் தோ்வு செய்யப்பட்டது.

தோ்வு செய்யப்பட்ட இரு அமைப்புகளுக்கும் பசுமை சாதனையாளா் விருது-2025-க்கான சான்றிதழ் மற்றும் தலா ரூ. ஒரு லட்சத்துக்கான காசோலையை ஆட்சியா் வழங்கினாா். நிகழ்ச்சியில் சம்மந்தப்பட்ட துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →