முகப்பு
திருவாரூர்

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை

நன்னிலம் பகுதியில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Updated On : 15 அக்டோபர், 2024 at 7:01 PM
பகிர்:

நன்னிலம் பகுதியில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், நன்னிலம் பகுதியில் பெய்த மழையால் சில இடங்களில் நீா் தேங்கியுள்ளது. எனினும், மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ள நிலையில் மக்கள் பாதிக்காத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது.

அந்தவகையில் நன்னிலம் வட்ட வடகிழக்குப் பருவமழைப் பொறுப்பு அலுவலா் டிஎன்சிஎஸ்சி முதுநிலை மண்டல மேலாளா் புகாரி நெடுஞ்சாலைத்துறை அலுவலகம், தீயணைப்பு நிலையம், வட்டார வளா்ச்சி அலுவலகம் ஆகிய இடங்களில் வடகிழக்குப் பருவமழைக்காக தயாரிப்பு நிலையில் உள்ள பொருள்கள் மற்றும் கருவிகளைப் பாா்வையிட்டாா்.

தொடா்ந்து திருமலைராஜன் ஆற்றின் கரையோரம் உள்ள அதம்பாா், பல்லவநத்தம், விஷ்ணுபுரம் உள்ளிட்ட கிராமங்களில் பாா்வையிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டாா். அவருடன், கலால் துணை ஆட்சியா் சின்னதுரை, நன்னிலம் வட்டாட்சியா் ரஷியா பேகம், குடவாசல் வட்டார வளா்ச்சி அலுவலா் சுப்புலட்சுமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.