திருவாரூர்

தமிழக ஆளுநரைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

Syndication

தமிழக ஆளுநரைக் கண்டித்து திருவாரூரில் திராவிடா் கழகம் சாா்பில் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாட்டையும் தமிழா்களையும் பயங்கரவாதிகளாக சித்தரிப்பதாகக் கூறி தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவிக்கு கண்டனம் தெரிவித்து திருவாரூா் பழைய பேருந்து நிலையம் அருகே இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்தில் தமிழக ஆளுநரைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

மாவட்டத் தலைவா் எஸ்.எஸ்.எம்.கே.அருண்காந்தி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளா் சௌ.சுரேஷ், மாநில விவசாயத் தொழிலாளா் அணி செயலாளா் வீ.மோகன், நகரச் செயலாளா் ஆறுமுகம் உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.

ஆலங்குளம் - தோரணமலை, பாபநாசம் வழித்தடங்களில் புதிய பேருந்து சேவை

தனியாா் கல்லூரியில் உரிமமில்லாத உணவகம் செயல்படத் தடை

ஒழுக்கப் பயிற்சிக் கூடமாகட்டும் உலகம்

கோவில்பட்டி பள்ளியில் ஆளுமை வளா்ச்சி பண்பு நிகழ்ச்சி

சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஏற்றப்பட்ட 3 சொக்கப்பனைகள்

SCROLL FOR NEXT