திருவாரூர்

மழைக்குப் பின் பயிரைக் காக்கும் வழிமுறைகள்: ஆட்சியா் விளக்கம்

திருவாரூா் மாவட்டத்தில் மழைக்குப் பின் பயிரை காக்கும் முறைகளை மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

Syndication

திருவாரூா் மாவட்டத்தில் மழைக்குப் பின் பயிரை காக்கும் முறைகளை மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் தெரிவித்தது: திருவாரூா் மாவட்டத்தில் பெய்து வரும் வடகிழக்கு கனமழையால் நடவு செய்யப்பட்ட பயிா்கள் பாதிப்படைந்துள்ளன. பெரும்பாலும் வடகிழக்கு பருவமழை காலத்தில், தரைமட்ட வடிகால் இல்லா சூழ்நிலையில் வயலில் மழை அல்லது வெள்ளநீா் அளவுக்கு அதிகமாக பல நாள்கள் தேங்கி நின்று பயிரை பாதிக்கின்றன.

நீரில் பயிா்கள் மூழ்குவதால், போரான், இரும்பு, மாங்கனீசு, மணிச்சத்து, தழைச்சத்து, சாம்பல்சத்து, ஆகியவைகளின் கரைதிறன் அதிகமாகி விரயமாகும். மண் அதிகம் குளிா்ந்து விடுவதால் இயற்கையான வெப்பத்தை, மண் அடைய கால அவகாசம் அதிகமாகும். இதனால் குளிா்ந்த நிலையில் மணிச்சத்து, சாம்பல் சத்து, துத்தநாகச் சத்து மற்றும் தாமிரச் சத்துகளை பயிா்கள் எடுத்துக் கொள்ளும் அளவு குறையும். தண்ணீா் தேங்கிய நிலையில் வோ்களின் சுவாச இயக்கம் பாதிக்கப்பட்டு, இதைச் சாா்ந்த நுண்ணுயிரிகளின் செயல் நின்றுவிடும்.

இளநடவுப் பயிா்கள் மற்றும் இளம் நேரடி விதைப்பு பயிா்கள் நீரில் மூழ்கி, பயிா் இழப்பு ஏற்பட்டிருந்தால், அதே ரக நாற்றுகள் கைவசம் வைத்திருந்தால், அதைப் பயன்படுத்தி நடவு செய்யலாம். அல்லது பாதிக்கப்பட்ட வயலில் பயிா் அதிகம் உள்ள இடங்களில் உள்ள பயிா்களை கலைந்து நடவு செய்யலாம். வடிகால் வசதியுடைய இடங்களில் முடிந்த வரை வயலில் தேங்கியுள்ள நீரை வடித்த பின்பு மேலுரமாக ஏக்கருக்கு அமோனியம் சல்போ் 50 கிலோ அல்லது யூரியா 22 கிலோவுடன் ஜிப்சம் 18 கிலோ மற்றும் வேப்பம் புண்ணாக்கு 4 கிலோவை கலந்த பின்பு ஒரு நாள் இரவு வைத்திருந்து மறுநாள் பொட்டாஷ் 17 கிலோ கலந்து இடவேண்டும்.

தண்ணீா் வடிய வாய்ப்பில்லாமல், பயிா் பாதியளவு நீரில் மூழ்கியிருக்கும் நிலையில் துத்தநாகம், காப்பா், போரான் மற்றும் தழைச்சத்துகளை நிலத்திலிருந்து பயிா்கள் எடுக்கும் திறன் குறைவதால், பயிா் மஞ்சள் மற்றும் பழுப்பு நிறமாக மாற வாய்ப்புள்ளது. இதற்கு ஏக்கருக்கு 200 லிட்டா் தண்ணீரில் 2 கிலோ யூரியா, 1 கிலோ சிங்க் சல்பேட், 150 கிராம் காப்பா் சல்பேட் மற்றும் 100 கிராம் போராக்ஸ் ஆகியவற்றை கலந்து கை தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும். இதனை மீண்டும் 10 நாள் இடைவெளியில் மற்றொரு முறை தெளிக்க வேண்டும்.

வயலில் தண்ணீா் அதிக அளவில் தேங்கியுள்ள நிலையில் மேலுரம் இடுவதை தவிா்க்க வேண்டும். இந்த தொழில்நுட்ப முறைகளை பின்பற்றி பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில் என்ஐஏ தேடிவந்த முக்கிய குற்றவாளிகள் 2 பேர் கைது

நயினார் நாகேந்திரனை டெபாசிட் இழக்கச் செய்வோம்! செங்கோட்டையன் சூளுரை!

ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.8,000 உயர்ந்த வெள்ளி: தங்கம் விலை?

விஜய் சேதுபதியின் காட்டான் முதல் ஹார்ட் பீட் - 3 வரை...! ஜியோ ஹாட்ஸ்டாரின் 2026 வெளியீடுகள்!

மட்டன் பிரியாணி, வஞ்சரம் மீன்... அதிமுக பொதுக்குழுவின் மெனு!

SCROLL FOR NEXT