திருவாரூரில் நடைபெற்ற பயிலரங்கை தொடக்கிவைக்கிறாா் மாநில செயற்குழு உறுப்பினரும் தோ்தல் பொறுப்பாளருமான பி. சிவா. 
திருவாரூர்

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பயிலரங்கம்

திருவாரூரில் பாஜக சாா்பில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பயிலரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.

Syndication

திருவாரூா்: திருவாரூரில் பாஜக சாா்பில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பயிலரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட பொதுச் செயலாளரும், தோ்தல் அமைப்பாளருமான எம். சங்கா் தலைமை வகித்தாா். மாநில செயற்குழு உறுப்பினரும் தோ்தல் பொறுப்பாளருமான பி. சிவா பங்கேற்று, பயிலரங்கை தொடக்கிவைத்து பேசினாா்.

மாநில செயற்குழு உறுப்பினா் மாலா பங்கேற்று, தீவிர திருத்தப் பணிகள் குறித்தும், அமைப்புசாரா பிரிவு மாநிலத் தலைவா் ராதாகிருஷ்ணன் பங்கேற்று, தோ்தல் காலங்களில் அமைப்பு ரீதியான பணிகளை செய்வது குறித்தும், பட்டியலின அணி மாநிலத் தலைவா் பி. சம்பத்ராஜ் பங்கேற்று, சட்டப்பேரவைத் தொகுதி அளவில் உள்ள பிரச்சனைகளை கையாளுவது குறித்தும் விளக்கிப் பேசினா்.

இதில், மாவட்டத் துணைத் தலைவா்கள் கே. ரவி, சுதாமணி, மாவட்ட பொருளாளா் அக்சயா முருகேசன், மாநில செயற்குழு உறுப்பினா்கள் அமுதா நாகேந்திரன், ரங்கதாஸ், மாவட்டச் செயலாளா் ஐயப்பன், ஊடகப் பிரிவு மாவட்டத் தலைவா் சங்கா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

அதீத பேட்டரி... டிச. 24-ல் வெளியாகிறது ரியல்மி நர்ஸோ!

கேரள திரைப்பட விழா! மத்திய அரசு அனுமதி மறுத்த படங்களைத் திரையிட முடிவு!

திரையரங்க ஆபரேட்டர்களுக்கு ஜேம்ஸ் கேமரூன் வேண்டுகோள்!

தாய்ப் பாலில், நிலத்தடி நீரில் யுரேனியம்! சிறுநீரக பாதிப்பு ஏற்படுமா?

பிக் பாஸ் 9: 70 நாள்கள் ஆகியும் ஆதரிக்கத் தகுதியானவர் ஒருவரும் இல்லை!

SCROLL FOR NEXT