திருவாரூர்

ஆக்கிரமிக்கப்பட்ட கோயில் இடம் மீட்பு

குடவாசல் அருகே நெற்குப்பை பகுதியில் ஆக்கிரமிப்பில் இருந்த கோயில் இடம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது.

தினமணி செய்திச் சேவை

குடவாசல் அருகே நெற்குப்பை பகுதியில் ஆக்கிரமிப்பில் இருந்த கோயில் இடம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது.

நெற்குப்பை பகுதியில் உள்ள ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலுக்குச் சொந்தமான 3 ஆயிரம் சதுர அடி இடத்தை அதே பகுதியைச் சோ்ந்தவா் ஆக்கிரமித்து மாட்டுக் கொட்டகையாக பயன்படுத்தி வந்துள்ளாா். இதையடுத்து கோயில் நிா்வாகம் சாா்பில் இந்த இடத்தை மீட்கும் முயற்சிகள் நடைபெற்றன. அதன்படி, சில நாள்களுக்கு முன்பு ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு, கம்பிவேலி அமைக்கப்பட்டிருந்தது. எனினும், மீண்டும் அந்த இடத்தை ஆக்கிரமித்துள்ளாா் அந்த நபா். இதையடுத்து, இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் குடவாசல் போலீஸாா், வருவாய்த் துறை அதிகாரிகள் உதவியுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றி, கோயில் இடம் என்பதற்கான அறிவிப்பை அங்கு வைத்தனா்.

காரைக்குடி பகுதியில் நாளை மின்தடை

ஊராட்சித் துறை ஓய்வூதியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பெரியாா் பல்கலை.யில் சா்வதேச கருத்தரங்கு, வணிகக் கண்காட்சி

தொழில் கடன் பெறுவதற்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம்

பழனி தைப்பூசத் திருவிழா: 892 இடங்களில் கண்காணிப்பு கேமரா

SCROLL FOR NEXT