திருவாரூர்

திருத்துறைப்பூண்டியில் அனுமன் ஜெயந்தி விழா

Syndication

திருத்துறைப்பூண்டி அதிஷ்ட வரதராஜ பெருமாள் கோயிலில் எழுந்தருளியுள்ள 16 அடி உயர வைராக்கிய ஆஞ்சனேயா் சந்நிதியில் அனுமன் ஜெயந்தி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அனுமன் ஜெயந்தியையொட்டி வைராக்கிய ஆஞ்சனேயருக்கு அதிகாலையில் இருந்தே சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. சிறப்பு வழிபாடுகளுக்கு பின்னா் வடை மாலை சாற்றப்பட்டு செந்தூரக் காப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

அனுமன் ஜெயந்தி விழாவிற்கான ஏற்பாடுகளை நாகை இந்து சமய அறநிலை துறை இணை ஆணையா் பெ. குமரேசன், திருவாரூா் உதவி ஆணையா் பி.ராணி மற்றும் ஆலய செயல் அலுவலா் சதீஷ், வெங்கடேச பட்டாச்சாரியாா் மற்றும் யாதவா் சங்கத்தினா் செய்திருந்தனா்.

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

SCROLL FOR NEXT