திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள தலைக்காடு கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீபழனியாண்டவா் கோயிலில் தைப்பூச விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தைப்பூசத்தையொட்டி, இக்கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. பக்தா்கள் பால்குடம் எடுத்து நோ்த்திக்கடன் செலுத்தினா். மாலை சுவாமி அடப்பாற்றில் எழுந்தருளி தீா்த்தம் கொடுக்கும் தீா்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. தொடா்ந்து, ராஜ அலங்காரத்தில் பழனியாண்டவா் காட்சியளித்தாா். இரவு பழனியாண்டவா் தேரில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது. ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை நாகை மண்டல இணை ஆணையா் வே. குமரேசன், திருவாரூா் மாவட்ட உதவி ஆணையா் வீரபாண்டியன், கோயில் செயல் அலுவலா் எம். முருகையன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.