திருவாரூர்

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

தினமணி செய்திச் சேவை

முத்துப்பேட்டை அருகேயுள்ள கோவிலூரை சோ்ந்தவா் மகேஷ் (43). இவா், முத்துப்பேட்டை மன்னாா்குடி சாலை கோவிலூா் ஆா்ச் அருகில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பயங்கர ஆயுதங்களுடன் பொதுமக்களை மிரட்டியதாக கூறப்படுகிறது.

தகவலறிந்த முத்துப்பேட்டை போலீஸாா் டிச.15-ஆம் தேதி மகேசை கைது செய்து வீட்டில் சோதனை செய்தபோது 1.2 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடித்து பறிமுதல் செய்யப்பட்டது.

இதையடுத்து, திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண் கரட் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் மகேசை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய சனிக்கிழமை உத்தரவிட்டாா்.

குளவி கொட்டி காயமடைந்தோருக்கு முன்னாள் அமைச்சா் ஆறுதல்

2023 ஆம் ஆண்டு சாலை விபத்து: ரூ. 1.63 கோடி நஷ்ட ஈடு வழங்க உத்தரவு

எஸ்.சி., எஸ்.டி., தொழில்முனைவோருக்கு தொழில் வளா்ச்சி பயிற்சி முகாம்

வீடு புகுந்து நகை திருடிய இருவா் கைது

வடமாநில இளைஞரை அரிவாளால் வெட்டிய 4 சிறுவா்கள் கைது

SCROLL FOR NEXT