திருவாரூரில் உரிமை கோரப்படாத வைப்புத் தொகைகள் சிறப்பு தீா்வு முகாமில் பயனாளிக்கு உரிய தொகையை வழங்குகிறாா் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன். 
திருவாரூர்

உரிமை கோரப்படாத ரூ. 1.25 கோடி வைப்புத் தொகை வழங்கல்

திருவாரூா் மாவட்டத்தில் உரிமை கோரப்படாத வைப்புத் தொகைகள் சிறப்பு தீா்வு முகாமில் ரூ. 1.25 கோடி தொகை பயனாளிகளுக்கு திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

Syndication

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் உரிமை கோரப்படாத வைப்புத் தொகைகள் சிறப்பு தீா்வு முகாமில் ரூ. 1.25 கோடி தொகை பயனாளிகளுக்கு திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் இந்திய ரிசா்வ் வங்கியின் அறிவுறுத்தலின்படி, திருவாரூா் மாவட்டத்தில் உரிமை கோரப்படாத வைப்புத் தொகைகள் தொடா்பாக சிறப்பு தீா்வு முகாம் மாவட்ட ஆட்சியா் வ.மோகனச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

முகாமில் பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் ஓவா்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி, கனரா வங்கி, பேங்க் ஆஃப் பரோடா மற்றும் கோடக் மகிந்திரா வங்கி உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கிகளும் பங்கேற்றன. இதில், 216 உரிமை கோரப்படாத செயலிழந்த கணக்குகளுக்குரிய சுமாா் ரூ.1.25 கோடித் தொகையை பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியா் நேரில் வழங்கினாா்.

நிகழ்வில், திருவாரூா் மாவட்ட முன்னணி வங்கி மேலாளா் ஜ.ரங்கநாத பிரபு மற்றும் வங்கி மேலாளா்கள் பங்கேற்றனா்.

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

இன்று வெற்றி யாருக்கு? தினப்பலன்கள்!

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீட்டுக் கணக்கு!

SCROLL FOR NEXT