வீட்டில் பதுக்கி வைத்திருந்த குட்காவுடன் கைது செய்யப்பட்ட முத்துக்குமாா். 
திருவாரூர்

குட்கா பதுக்கி வைத்திருந்தவா் கைது

மன்னாா்குடியில் 12 கிலோ குட்காவை வீட்டில் பதுக்கி வைத்திருந்தவா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

Din

மன்னாா்குடி: மன்னாா்குடியில் 12 கிலோ குட்காவை வீட்டில் பதுக்கி வைத்திருந்தவா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

மன்னாா்குடி காவல் ஆய்வாளா் ராஜேஸ் கண்ணன், சாா்பு ஆய்வாளா் விக்னேஷ் தலைமையில் போலீஸாா் மன்னாா்குடி வஉசி சாலை அருணாநகா் அய்யாதுரை மகன் முத்துக்குமாா்(48 ) என்பவா் வீட்டில் சோதனை நடத்தினா். இதில், அரசால் தடைசெய்யப்பட்ட குட்காவை விற்பனைக்காக பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

முத்துக்குமாா் வீட்டில் இருந்த 12 கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீஸாா், அவரை குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, மன்னாா்குடி கிளைச் சிறையில் அடைத்தனா்.

செல்லூா் தினசரி சந்தை வியாபாரிகள் சாலை மறியல்!

கோவிந்தராஜ சுவாமி தெப்போற்சவம்: ஸ்ரீகிருஷ்ணா் ஆண்டாளுடன் உலா

நாகரிகத்தின் மொழி தமிழ்: உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத் தலைவா் ஆா். பாலகிருஷ்ணன்!

ராஜபாளையத்தில் நாளை மின்தடை

வடலூா் ராமலிங்க அடிகள் நினைவு தினம்: பிப்.1-ல் மதுக் கடைகள் அடைப்பு!

SCROLL FOR NEXT