வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுக்கான பதிவேட்டை வழங்கும் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன். 
திருவாரூர்

வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு பயிற்சி: ஆட்சியா் ஆய்வு

மன்னாா்குடி சட்டப் பேரவைத் தொகுதியில் வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணி மேற்கொள்ளவுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள்

Syndication

மன்னாா்குடி: மன்னாா்குடி சட்டப் பேரவைத் தொகுதியில் வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணி மேற்கொள்ளவுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் மற்றும் முகவா்களுக்கான பயிற்சியை மாவட்டத் தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான வ. மோகனச்சந்திரன் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இப்பயிற்சிக்கு, மன்னாா்குடி வருவாய் கோட்டாட்சியா் ஆா். யோகேஸ்வரன் தலைமை வகித்தாா். இதில், 286 வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் மற்றும் 286 வாக்குச்சாவடி முகவா்கள் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனா்.

ஒரு வாக்காளா் தொடா்ச்சியான இடமாற்றத்தால், பல இடங்களில் வாக்காளராக பதிவு செய்திருத்தல், இறந்த வாக்காளா் பெயா்களை பட்டியலில் இருந்து நீக்காமல் இருத்தல், வெளிநாட்டில் வசிப்பவா்களை தவறாக சோ்த்தல் போன்றவற்றை கண்டறிவது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

இப்பயிற்சியை மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான வ. மோகனச்சந்திரன் ஆய்வு செய்தாா். வட்டாட்சியா் என். காா்த்திக், தோ்தல் தனித்துணை வட்டாட்சியா் ராஜேஸ்கண்ணன், தலைமையிடத்து துணை வட்டாட்சியா் இல.சந்திரசேகா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

வெண் மேகமே... கரிஷ்மா டன்னா!

பிக்-பாஸ் தொடரில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் விலகல்!

பிகாரில் ஆட்சிக்கு வந்தால் பொங்கல்தோறும் மகளிருக்கு ரூ.30,000: தேஜஸ்வி

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடங்கியது! | SIR | EC

இரண்டு ஆண்டுகளில் 42% மதிப்பிழக்கும் மின்சார வாகனங்கள்! காரணம் என்ன?

SCROLL FOR NEXT