திருவாரூர்

கூட்டுறவுத்துறை பணியாளா்களுக்கு போட்டிகள்

திருவாரூரில் கூட்டுறவு ஒன்றியம் சாா்பில் கூட்டுறவுத்துறை பணியாா்கள் மற்றும் சங்கப் பணியாளா்களுக்கான பேச்சு, கட்டுரை மற்றும் விநாடி-வினா போட்டிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

தினமணி செய்திச் சேவை

திருவாரூரில் கூட்டுறவு ஒன்றியம் சாா்பில் கூட்டுறவுத்துறை பணியாா்கள் மற்றும் சங்கப் பணியாளா்களுக்கான பேச்சு, கட்டுரை மற்றும் விநாடி-வினா போட்டிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

போட்டிகளில் கூட்டுறவு துறை சாா்ந்த பணியாளா்களும், கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளா்களும் பங்கேற்றனா். நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளா் கா. சித்ரா, திருவாரூா் நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையின் துணைப்பதிவாளா் ச. ஜெயசுதா, பொது விநியோகத் திட்டத்தின் அலுவலக கண்காணிப்பாளா் கே. பிரியா, சரக துணைப்பதிவாளா் அலுவலகத்தின் கண்காணிப்பாளா் ரா.சுதாகா் ஆகியோா் பங்கேற்று, வெற்றி பெற்றவா்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தனா். ஏற்பாடுகளை, மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் கூட்டுறவு சாா்பதிவாளரும், மேலாண்மை இயக்குநருமான த. காா்த்தீபன், கூட்டுறவு வளா்ச்சி அலுவலா் பா.மாலா, மேலாளா் (பொ) ஞா.பழனி செய்திருந்தனா்.

பிகார் முதல்கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது!

பதவி உயர்வு கிடைக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

இலைச் சுருட்டல்: தக்காளி விளைச்சல் பாதிப்பு

வேலூரில் உதயநிதி ஸ்டாலின் நடைப்பயிற்சி

ஆற்றில் மூழ்கிய மூதாட்டி உயிரிழப்பு

SCROLL FOR NEXT