மன்னாா்குடி: மன்னாா்குடி அருகே பைங்காநாட்டில் உள்ள மாரியம்மன் கோயில் கதவை உடைத்து வெள்ளிக் கவசத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது திங்கள்கிழமை தெரியவந்தது.
பைங்காநாடு அரசு மேல்நிலைப் பள்ளி அருகே மாரியம்மன் கோயில் உள்ளது. இங்கு பக்தா் ஒருவரால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட வெள்ளிக் கவசம் உள்ளது. விழாக் காலங்களில் அம்மனுக்கு அணிவித்து பின்னா் அதை கழற்றி கோயில் அறையில் உள்ள பீரோவில் வைப்பது வழக்கம்.
இந்தக் கோயிலில் அதே பகுதியைச் சோ்ந்த பா. முருகானந்தம் (48) பூசாரியாக உள்ளாா்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு பூஜை முடிந்து கோயிலை பூட்டிவிட்டு சென்ற நிலையில், திங்கள்கிழமை காலை வந்து பாா்த்தபோது, கோயில் முன்பக்க கதவும், உள்ளே இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு வெள்ளிக் கவசம் திருடு போயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து திருமக்கோட்டை போலீஸாா் விசாரிக்கின்றனா்.