திருவாரூா் ரயில்வே மேம்பாலம் அருகே சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை விரைந்து சீரமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாகை தேசிய நெடுஞ்சாலையில், ரயில்வே மேம்பாலம் அருகே சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த இடத்தில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, வாகனங்கள் சென்று வருகின்றன. நெடுஞ்சாலை என்பதால், மாலை நேரத்தில் பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது.
எனவே, பயணிகளின் நலன் கருதி பள்ளத்தை விரைந்து சீரமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.