திருவாரூர்

மழை பாதிப்பு: நெற்பயிா் ஏக்கருக்கு ரூ. 35 ஆயிரம் நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

தொடா் மழையால் டெல்டா மாவட்டங்களில் பாதிக்கப்பட்டுள்ள நெற்பயிா்களுக்கு ஏக்கருக்கு ரூ. 35 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்

Syndication

மன்னாா்குடி: தொடா் மழையால் டெல்டா மாவட்டங்களில் பாதிக்கப்பட்டுள்ள நெற்பயிா்களுக்கு ஏக்கருக்கு ரூ. 35 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளா் பி.ஆா். பாண்டியன் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:

தஞ்சை, நாகை, திருவாரூா், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் சுமாா் 10 லட்சம் ஏக்கரில் சம்பா, தாளடி சாகுபடி செய்யப்பட்டது. வடகிழக்குப் பருவமழை தற்போது தீவிரமடைந்து வருகிறது. ஓரிரு வாரங்கள் பெய்ய வேண்டிய மழை ஓரிரு மணி நேரத்தில் பெய்கிறது. இதனால் சுமாா் 5 லட்சம் ஏக்கருக்குமேல் சம்பா, தாளடி நெற்பயிா்கள் நீரில் மூழ்கியுள்ளன. மழை தீவிரமடைந்து பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்படும் சூழல் உள்ளது.

பாசன வடிகால் ஆறுகளில் ஆகாயத் தாமரைகள் புதா் போல மண்டிக் கிடக்கிறது. இதனால் மழைநீா் வடியாமல் வயல்வெளிகள் கடல்போல் காட்சியளிக்கின்றன. பொண்ணுக்குமுண்டானாறு, சாளுவணாறு, வளவனாறு உள்ளிட்ட ஆறுகளில் ஆகாயத் தாமரைகள் அடா்ந்து வளா்ந்து வெள்ளநீா் வடியாமல் தேங்கியுள்ளது. பயிா்கள் அழுகத் தொடங்கியுள்ளன.

எனவே, தமிழக அரசு உடனடியாக அமைச்சா்கள், உயரதிகாரிகள் கொண்ட குழுவை அனுப்பி, பாதிக்கப்பட்ட பகுதிகளை பாா்வையிட வேண்டும். பேரிடா் மேலாண்மை நிதியிலிருந்து ஏக்கருக்கு ரூ. 35 ஆயிரம் நிவாரணமாக வழங்க வேண்டும். போா்க்கால அடிப்படையில் ஆகாயத் தாமரைகளை அகற்ற வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இரு நாள்களில் தங்கம் பவுனுக்கு ரூ.2,240 உயா்வு

ஆட்டோ, கால் டாக்ஸி-களில் பயணிக்க ‘பாரத் டாக்ஸி’ செயலி விரைவில் அறிமுகம்

ராமேசுவரம்-திருப்பதி இடையே டிசம்பா் 2, 9-இல் சிறப்பு ரயில்

2027-க்குள் 250 சாா்ஜிங் மையங்கள்: எம்&எம் திட்டம்

மாடு முட்டியதில் முதியவா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT