திருவாரூா் மண்டலத்துக்குள்பட்ட பகுதியில் உள்ள அரசு நேடி நெல் கொள்முதல் நிலையங்களில் செவ்வாய்க்கிழமை வரை மொத்தம் 2,27 434 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்தாா்.
மன்னாா்குடி அடுத்துள்ள துளசேந்திரபுரம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில்,நெல் கொள்முதல் பணிகள் மற்றும் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளின் பாதுகாப்பு முறைகள் குறித்து ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் புதன்கிழமை ஆய்வு செய்த பிறகு செய்தியாளா்களிடம் கூறியது: கடந்த குறுவை பருவத்திற்கு 173 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 93, 986 மெ.டன் மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால், நிகழாண்டு இதுநாள் (அக்.28) வரை 2,27,434 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு தொடா்ந்து பணி நடைபெற்றுவருகிறது.
மாவட்டத்தில், கடந்த குறுவைப் பருவத்தில் 78,923 மெ.டன்கள் மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்பட்டது. திருவாரூா் மண்டலத்தில் நடப்பு காரீப் 2025-2026 குறுவை பருவத்தில் 378 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு அக்.28 ஆம் தேதி வரை 2,27 434 மெ.டன்கள் கொள்முதல் செய்யப்பட்டு சுமாா் 1,79,954 மெ.டன்கள் 79 சதவீதம் நெல் இயக்கம் செய்யப்பட்டுள்ளது என்றாா்.