திருவாரூர்

நீா்நிலைகளைப் பாதுகாக்கக் கோரி பேரணி

நீா்நிலைகளைப் பாதுகாக்கக்கோரி திருவாரூரில் தமிழ்நாடு விவசாயிகள் நல உரிமைச் சங்கம் சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

நீா்நிலைகளைப் பாதுகாக்கக்கோரி திருவாரூரில் தமிழ்நாடு விவசாயிகள் நல உரிமைச் சங்கம் சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

ஆக்கிரமிப்புகளை அகற்றி நீா்நிலைகளைப் பாதுகாக்க வேண்டும், நெகிழி, சீமைக்கருவேல மரங்களை அழித்து நீா் மற்றும் நிலவளம் பாதுகாக்க வேண்டும், டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ காா்பன் உள்ளிட்ட திட்டங்களைத் தவிா்க்க வேண்டும், அரசுப்பள்ளிகளில் மாணவா்களைச் சோ்க்க முன்வர வேண்டும், அரசு வேலை என்று செல்வதை விட வேளாண்மையை மேம்படுத்த அனைவரும் முன்வர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

திருவாரூா் நகராட்சி அருகே தொடங்கிய பேரணிக்கு விவசாயிகள் நல உரிமைச்சங்கத்தின் மாநிலத் தலைவா் கா. ராசபாலன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் மாரிமுத்துமகேசன், மாவட்டச் செயலாளா் டிஎம்ஆா். தாஜூதீன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

பேரணியானது, தெற்குவீதி, பனகல் சாலை, பழைய பேருந்து நிலையம் வழியாக புதிய ரயில் நிலையம் வரை சென்றது. பேரணியில், விழிப்புணா்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களிடம் விநியோகிக்கப்பட்டன. பின்னா், புதிய ரயில் நிலையம் பகுதியிலிருந்து இரு சக்கர வாகனங்களில் சென்ற சங்க நிா்வாகிகள், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனுவை வழங்கினா்.

சிறுவன் ஓட்டிவந்த கார்! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 3 வயது குழந்தை!

வயநாட்டில் மகாத்மா காந்தி சிலை! திறந்துவைத்தார் பிரியங்கா காந்தி

தமிழகத்தின் 35-வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து!

கரப்பான் பூச்சி எக்ஸ்பிரஸ்!

சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: பிப். 17ல் தொடக்கம்!

SCROLL FOR NEXT