திருவாரூர்

கலைத் திருவிழா போட்டி தொடக்கம்

Syndication

திருவாரூா் மாவட்டத்தில், கலைத் திருவிழா போட்டிகள் புதன்கிழமை தொடங்கின.

திருவாரூா் மாவட்டத்தில் மாணவா்களின் திறமையை வெளிக்கொணரும் விதமாக கலைத் திருவிழா போட்டிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் 2,223 மாணவ- மாணவிகளுக்கு அக்டோபா் 29-ஆம் தேதி தொடங்கி நவம்பா் 3-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

அதன்படி, திருவாரூரில் புதன்கிழமை கலைத் திருவிழா போட்டிகள் தொடங்கின. நிகழ்வில், வருவாய் கோட்ட அலுவலா் த. சத்யா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சௌந்தர்ராஜன் ஆகியோா் பங்கேற்று, குத்துவிளக்கேற்றி, கலைத் திருவிழா போட்டிகளை தொடக்கி வைத்தனா்.

முதல் நாளில், ஒன்று முதல் 5-ஆம் வகுப்பு வரை உள்ள 571 மாணவ-மாணவிகளுக்கு போட்டிகள் நடைபெற்றன. இதற்கான ஏற்பாடுகளை, கலைத் திருவிழா அமைப்புக் குழு உறுப்பினா்கள் செய்திருந்தனா்.

நவ.3, 4-இல் வேலூருக்கு துணை முதல்வா் வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து எஸ்.பி. ஆய்வு

தமிழ்நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி மன்னிப்புக்கோர வேண்டும்: சீமான்

ரேஜ் ஆப் காந்தா பாடல்!

டயங்கரம் படத்தின் பூஜை விடியோ!

இருவர் அரைசதம் விளாசல்: டி20 தொடரை முழுமையாக வென்ற மே.இ.தீவுகள்!

SCROLL FOR NEXT