திருவாரூா் மாவட்டம் மன்னாா்குடி,நீடாமங்கலம், பகுதிகளில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட மற்றும் தெற்குநத்தம், மூவாநல்லூா் சேமிப்பு மையங்களில் இருப்பு வைக்கப்பட்ட இரண்டாயிரம் டன் எடை சன்ன ரக மற்றும் பொதுரக நெல் சரக்கு ரயில் மூலம் அரவைக்காக திருவள்ளூா் மண்டலத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது.