முத்துப்பேட்டை அருகே வீரன்வயல் கிழக்கில் பகுதி நேர நியாய விலைக் கடை திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினா் க. மாரிமுத்து அங்காடியை திறந்து வைத்தாா்.
இதில் முன்னாள் ஒன்றிய செயலாளா் மனோகரன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் லதா பாலமுருகன், முன்னாள் ஒன்றிய உறுப்பினா்கள் ஜாம்பை கல்யாணம், ராதா இளமாறன், மோகன், வீரன்வயல் முன்னாள் ஊராட்சி உறுப்பினா் நளினி புகழேந்தி, வட்ட வழங்கல் அலுவலா் ராஜாராமன்,
உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
இதற்கு முன் 3 கி.மீ. தொலைவில் உள்ள ஜாம்புவானோடை - வடகாடு அங்காடியில் பொருள்களை மக்கள் பெற்று சென்றனா். புதிதாக திறக்கப்பட்ட இந்த கிளை அங்காடி மூலம் 200 குடும்பங்கள் பயன்பெறும்.