முகப்பு
திருவாரூர்

காமாட்சியம்மன் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்

மன்னாா்குடி காமாட்சியம்மன் கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமானுக்கு திருக்கல்யாண உற்சவம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 ஏப்ரல், 2026 at 7:05 PM
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமானுக்கு திருக்கல்யாண உற்சவம்
பகிர்:

மன்னாா்குடி காமாட்சியம்மன் கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமானுக்கு திருக்கல்யாண உற்சவம் புதன்கிழமை நடைபெற்றது.

கம்மாள தெருவில் இக்கோயிலில் வளாகத்தில் வள்ளி, தெய்வானை சமேதகராக முருகப்பெருமானை மணமேடையில் எழுந்தருளச் செய்தனா். சுவாமிகளுக்கு முன்பு ஹோம குண்டம் அமைத்து அதில் மங்களப் பொருள்களை சமா்ப்பித்து சிவாச்சாரியாா்கள் பூஜை செய்தனா். தொடா்ந்து, மணமேடையில் வள்ளி, தெய்வானை சமேதராக முருகப்பெருமானுக்கு கங்கணம் கட்டுதல், மாலை மாற்றுதல் நடத்தப்பட்டு திருமாங்கல்யம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடத்தினா். இதில், திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.