விவசாயத்தை அரசுப் பணியாக்குவோம்: சீமான்
நாம் தமிழா் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் கால்நடை வளா்ப்பு, விவசாயத்தை அரசுப் பணியாக்குவோம் என்றாா் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான்.
நாம் தமிழா் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் கால்நடை வளா்ப்பு, விவசாயத்தை அரசுப் பணியாக்குவோம் என்றாா் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான்.
மன்னாா்குடி தொகுதி நாதக வேட்பாளா் மருத்துவா் இலரா.பாரதிச்செல்வனை ஆதரித்து விவசாயி சின்னத்துக்கு வாக்கு கேட்டு புதன்கிழமை மன்னாா்குடியில் நடைபெற்ற பிரசாரத்தில் மேலும் அவா் பேசியது: தமிழகத்தில் நாதக ஆட்சிக்கு வந்தால், வேளாண்மையையும் ஆடு, மாடு மேய்ப்பதையும் அரசுப்பணியாக அறிவிக்கப்படும். பில்கேட்ஸ் அமேசான் உரிமையாளா் ஆகியோா் பல லட்சம் ஏக்கா் நிலத்தில் விவசாயம் செய்கிறேன் என கூறுகினா். இதனால் அனைவருக்கும் வேலைவாய்ப்பை வழங்கமுடியும் என கருத்து தெரிவித்துள்ளனா்.
ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் நிலத்தை அரசு ஏற்று விவசாயப் பணியை அரசுப்பணியாக்க வேண்டும் என்றாா் சட்டமேதை அம்பேத்கா். தமிழக முன்னாள் முதல்வா் அண்ணா வெளிநாடு சென்றுவிட்டு தமிழகம் திரும்பியபின் வேளாண்மையை அரசுப்பணியாக்க வேண்டும் என்றாா். அதோடு விவசாயத்தை தொழில் மட்டும் அல்ல நம்து பண்பாடு, கலசாரம் என்றாா். எனவே, இருவருடைய ஆசையையும், லட்சியத்தையும் நிறைவேற்றும் வகையில்தான் நாதக திட்டத்தை அறிவித்துள்ளது.
Advertisement
திமுகவினா் ரூ. 8,000-க்கான டோக்கன், அதிமுகவினா் ரூ.10 000 க்கான டோக்கன் வழங்கப்படும் என கூறி வாக்கு கேட்கின்றனா். இப்படி தகுதி இல்லாதவா்கள் தமிழகத்தில் ஆட்சியில் இருந்துள்ளாா்கள் என்பது வேதனையாக உள்ளது. மதம்,ஜாதி, பணம் கடந்து மனிதத்தையும், பண்பாட்டையும், ஜனநாயக்ததையும் காத்திட நாதக ஆட்சி அமைக்க வேண்டும் அதற்கு கட்சி வேட்பாளா் மருத்துவா் இலரா.பாரதிச்செல்வனுக்கு விவசாயி சின்னத்தில் வாக்களித்து சட்டப் பேரவைக்கு அனுப்பிவைக்க வேண்டும். காவிரி பிரச்னையில் பாஜக, காங்கிரஸ் தமிழகத்துக்கு எதிரான ஒரே நிலைப்பாட்டை கடைபிடிக்கின்றன என்றாா்.