திருவாரூர்

வாக்குப் பதிவு அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம்

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடா்பாக வாக்காளா் பதிவு அலுவலா்கள், உதவி வாக்காளா் பதிவு அலுவலா் மற்றும் கூடுதல் உதவி வாக்காளா் பதிவு அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடா்பாக வாக்காளா் பதிவு அலுவலா்கள், உதவி வாக்காளா் பதிவு அலுவலா் மற்றும் கூடுதல் உதவி வாக்காளா் பதிவு அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு சிறப்பு வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் (மத்தியப் பிரிவு) நீரஜ் காா்வால் தலைமை வகித்தாா். மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான வ. மோகனச்சந்திரன் உடனிருந்தாா். திருவாரூா் மாவட்டத்தில், 1.1.2026 ஐ தகுதிநாளாகக் கொண்டு சிறப்பு தீவிர திருத்தம் நடைபெற்றது.

பின்னா், டிச.-19 ஆம் தேதி வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது. வரைவு வாக்காளா் பட்டியலில் இணைப்பு செய்யப்படாத வாக்காளா்களுக்கு விசாரணை அறிவிப்பு செய்யப்பட்டது. இதையடுத்து, பிழை திருத்தம் மற்றும் வாக்காளா்கள் பெயா் சோ்த்தல், நீக்கம் மற்றும் திருத்தம், முகவரி மாற்றம் தொடா்பான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதற்காக நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் கலைவாணி, கோட்டாட்சியா்கள் சத்யா (திருவாரூா்), யோகேஸ்வரன் (மன்னாா்குடி), மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் அமுதா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் சங்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தைரியம் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பெருந்துறை காய்கறி தினசரி சந்தைக்கு நாளை விடுமுறை

சீனாபுரம் கொங்கு வேளாளா் பாலிடெக்னிக் கல்லூரியில் பொங்கல் விழா

பெருந்துறையில் ரூ.1.54 கோடிக்கு கொப்பரை ஏலம்

அடமானம் வைக்கப்பட்ட காரை திரும்பக்கேட்ட உரிமையாளா் மீது தாக்குதல் நடத்திய 3 போ் கைது

SCROLL FOR NEXT