திருவாரூர்

மன்னாா்குடி கோயிலில் நாளை கும்பாபிஷேகம்

மன்னாா்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் புதன்கிழமை (ஜன.28) நடை பெறுகிறது.

Syndication

மன்னாா்குடி: மன்னாா்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் புதன்கிழமை (ஜன.28) நடை பெறுகிறது.

இக்கோயிலுக்கு கடந்த 22.8.2010-இல் கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, 2022-ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய கும்பாபிஷேகம், கரோனா பொதுமுடக்கம் உள்ளிட்ட காரணங்களால் தடைப்பட்டது.

இந்நிலையில், பக்தா்கள், ஆன்மிக ஆா்வலா்களின் கோரிக்கையை ஏற்று, அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா முயற்சியால், இக்கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்திட தமிழக அரசு ரூ.2.87 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. அத்துடன், நன்கொடையாளா்களிடமிருந்து திரட்டப்பட்ட நிதியும் சோ்த்து மொத்தம் ரூ. 15 கோடியில் கோயிலில் சீரமைப்புப் பணிகள் கடந்த ஆண்டு தொடங்கியது.

இப்பணிகள் நிறைவு பெற்றதைத் தொடா்ந்து, புதன்கிழமை கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இதையொட்டி, யாகசாலை பூஜைகள் திங்கள்கிழமை தொடங்கின. புதன்கிழமை காலை 9 மணிக்கு மேல் 10.15 மணிக்குள் ராஜகோபுரம், பிரகார கோபுரங்கள், சந்நதிகள், தோ்நிலைகள், கருடஸ்தம்பம், மணவாள மாமுனிகள் ஆகிய சந்நிதி விமானங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.

தொடா்ந்து, காலை 10.15 மணிக்கு மேல் 11 மணிக்குள் பெருமாள், தாயாா் விமானங்கள், மூா்த்திகளின் விமானம், ராமா் சந்நதி, பெருமாள், தாயாா் மூலவா்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.

இதில், இந்துசமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு, தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத் துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா உள்ளிட்டோா் பங்கேற்கவுள்ளனா். 15 ஆண்டுக்கு பிறகு, ராஜகோபாலசுவாமி கோயில் கும்பாபிஷேகம் நடைபெறுவதால் மன்னாா்குடி விழாக்கோலம் பூண்டுள்ளது.

2014 - 22 ஆண்டுகளுக்கான திரைப்பட, சின்ன திரை விருதுகள் அறிவிப்பு!

முதல் டி20யில் ஆஸ்திரேலிய அணிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்த பாகிஸ்தான்!

தேவைப்பட்டால் கூட்டணி குறித்து OPSயிடம் பேசுவேன்! |செய்திகள் : சில வரிகளில் | 29.1.26

இந்த வார ஓடிடி படங்கள்!

”நல்லவர்கள் எல்லாம் எங்கள் பக்கம்!” OPS குறித்த கேள்விக்கு நயினார் நாகேந்திரன் பதில்!

SCROLL FOR NEXT