முகப்பு
புதுதில்லி

வறட்சியை சமாளிக்க குறுகிய கால சாகுபடி: எம்எஸ் சுவாமிநாதன் யோசனை

புது தில்லி, ஆக. 17: போதிய பருவ மழையின்மையை சமாளிக்க குறுகிய கால சாகுபடியில் விவசாயிகள் கவனம் செலுத்த வேண்டும் என்று தமிழகத்தைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் யோசனை கூறினார். இது குறித்

Updated On : 2 ஜனவரி, 2024 at 6:32 PM
பகிர்:

புது தில்லி, ஆக. 17: போதிய பருவ மழையின்மையை சமாளிக்க குறுகிய கால சாகுபடியில் விவசாயிகள் கவனம் செலுத்த வேண்டும் என்று தமிழகத்தைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் யோசனை கூறினார்.

இது குறித்து, "தினமணி' செய்தியாளருக்கு அவர் அளித்த பேட்டி:

வேளாண் உற்பத்தியில் தமிழக விவசாயிகளின் செயல்பாடு சிறப்பாக உள்ளது. தற்போது பருவ மழை போதுமான அளவுக்குப் பெய்யவில்லை. இது போன்ற காலங்களில் குறுகிய கால சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட வேண்டும். இதற்கான வழிமுறைகளை அவர்கள் கண்டறிந்து பயிரிட வேண்டும்.

தமிழகத்தில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவ மழை பெய்யும். அப்போது, மழை நீரை சேமிக்கவேண்டும். தமிழகத்தில் கன்மாய், குளம், ஏரிகளில் நீரைத் தேக்கி வைத்து விவாயிகள் பயன்படுத்தலாம்.

மரபணு மாற்றப்பட்ட (பி.டி.) விதைகளைப் பயன்படுத்தவது தொடர்பாக ஆய்வு செய்ய மரபணு கட்டுப்பாட்டு ஆணையம் தொடங்க வேண்டும். இந்த ஆணையம் சுயேச்சையாக செயல்பட்டு ஆய்வை மேற்கொள்ள வேண்டும்.

தமிழகம், ஆந்திரம், ஒடிசா ஆகிய மாநிலங்களின் கடலோரப் பகுதிகளில் சுமார் மூன்றாயிரம் ஏக்கர் சதுப்பு நிலக் காடுகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

நாட்டில் உற்பத்தியாகும் தானியங்களைத் தகுந்த முறையில் பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் பங்களிப்பைக் காரணம் காட்டி மத்திய அரசு காலதாமதம் செய்யக்கூடாது.

வேளாண்துறையில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கும் வகையில் "பெண் விவசாயிகள் சட்டம்' என்ற தனி நபர் மசோதாவை நிறைவேற்ற வேண்டும். அதன் மூலம் வேளாண்மையில் ஈடுபடும் பெண்களுக்கு வங்கி கடன், தொழில்நுட்ப உதவிகள் உள்ளிட்டவற்றை வழங்க முடியும் என்று சுவாமிநாதன் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.