ஐபிஎல் சூதாட்டம்: 4 பேர் கைது
ஐபிஎல் கிரிகெட் போட்டிகளை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்ததாக தில்லி உத்தம் நகரைச் சேர்ந்த ராஜேந்தர் குமார் ஒüஜா (39), ரவி பெல்லான் (30), வினய் குமார் (38), அஜய் அரோரா (28) என்ற நான்கு பேர் சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனர்.

இது குறித்து, போலீஸார் கூறியதாவது:
ராஜேந்தர் குமார் ஒüஜா வீட்டில் கிரிக்கெட் சூதாட்டம் நடைபெறுவதாக தகவல் கிடைத்தது. அவரது வீட்டில் சோதனையிடச் சென்றபோது, அப்போது தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த "மும்பை இண்டியன்ஸ்', "புணே வாரியர்ஸ்' அணிகளுக்கிடையே போட்டியில் பந்தயம் கட்டி அவர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
விசாரணையில், இரண்டு ஆண்டுகளாக அவர்கள் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களிடமிருந்து 10 செல்போன்கள், ரூ. 45,500 ரொக்கம், எல்சிடி டிவி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன என்று போலீஸார் கூறினர்.