புதுதில்லி

டிடிஇஏ பள்ளிகளில் உலக பூமி, புத்தகம் தின விழா

DIN

தில்லி தமிழ்க் கல்விக் கழகப் பள்ளிகளில் (டிடிஇஏ) உலக பூமி, புத்தகம் தினம் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்களின் உரை இடம் பெற்றது. அந்தந்தப் பள்ளிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர்கள் ஹரிகிருஷ்ணன் (மோதி பாக்), ராஜி கமலாசணன் (ஜனக்புரி), காயத்ரி (மந்திர் மார்க்), உமா தேவி (லோதி எஸ்டேட்), மீனா சகானி (லக்ஷ்மிபாய் நகர்), துணை முதல்வர் சித்ரா ராதாகிருஷ்ணன் (பூசா சாலை), துணை முதல்வர் தங்கவேலு (ராமகிருஷ்ணாபுரம்) ஆகியோரின் உரையும் இடம் பெற்றது.
புத்தக தினத்தையொட்டி ராமகிருஷ்ணாபுரம் பள்ளியில் பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. பூமி தினத்தையொட்டி மோதி பாக் பள்ளியில் கார்ட்டூன் வரையும் போட்டி நடைபெற்றது. 6, 7, 8 வகுப்பு மாணவர்களுக்கு பூமியைப் பாதுகாப்போம் என்ற தலைப்பில் ஓவியப் போட்டியும் நடைபெற்றது. 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வாசகம் எழுதும் போட்டியும் நடைபெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசுகளை பள்ளி முதல்வர் ஹரி கிருஷ்ணன், துணை முதல்வர் ரஞ்சன் குப்தா, ஆகியோர் வழங்கினர்.
போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களை டிடிஇஏ தலைவர் சூரிய நாராயணன், செயலாளர் ஆர். ராஜு ஆகியோர் பாரட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நெல்லை பழமொழிகள்’ நூல் வெளியீடு

நெல்லையில் நீரில் மூழ்கி தொழிலாளி பலி

நெல்லை நீதிமன்றம் ராக்கெட் ராஜாவுக்கு ஜாமீன்

நெல்லையில் 106.1 டிகிரி வெயில்

களக்காடு மீரானியா பள்ளி 98% தோ்ச்சி

SCROLL FOR NEXT