புதுதில்லி

3 மாநகராட்சிகளுக்கு தலா 10 நியமன உறுப்பினர்கள் நியமனம்

DIN

தில்லியில் உள்ள மூன்று மாநகராட்சிகளுக்கும் தலா 10 நியமன உறுப்பினர்களை (அல்டர்மேன்) நியமித்து தில்லி அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
பல்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லுநர்கள், சமூக ஆர்வலர்களான இவர்கள் மாநகராட்சியின் செயல்பாட்டுக்கு வழிகாட்டியாக இருப்பார்கள் என்று தில்லி அரசு தெரிவித்துள்ளது.
தில்லி 2012-இல் வடக்கு, தெற்கு, கிழக்கு என மூன்று மாநகராட்சிகளாகப் பிரிக்கப்பட்டன. இந்த மாநகராட்சிகளை கடந்த 10 ஆண்டுகளாக பாஜக ஆட்சி செய்து வருகிறது. அண்மையில் நடைபெற்ற மாநகராட்சித் தேர்தலில் பாஜக 181 வார்டுகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ், ஆம் ஆத்மி முறையே 31 மற்றும் 49 வார்டுகளில் மட்டுமே வெற்றி பெற்று கடும் பின்னடைவைச் சந்தித்தன.
இந்நிலையில், மூன்று மாநகராட்சிகளுக்கும் தலா 10 நியமன உறுப்பினர்களை நியமித்து தில்லியை ஆளும் ஆம் ஆத்மி அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இது குறித்து வடக்கு தில்லி மேயர் பிரீத்தி அகர்வால் கூறுகையில் 'அரசியல் ஆதாயத்துக்காகவே நியமன உறுப்பினர்களை வடக்கு தில்லி மாநகராட்சிக்கு தில்லி அரசு நியமித்துள்ளது.
இதில் நரேலா மண்டலத்தைச் சேர்ந்த 6 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இது ஏதோ திட்டமிட்டு செய்யப்பட்ட நடவடிக்கையாகவே கருதப்படுகிறது' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT